சுவரொட்டி ஒட்டியவர்களுக்கு 5ஆயிரம் ரூபாய் தண்டம்

பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி யாழ்ப்பாணம் மாநகரை அசுத்தப்படுத்திய குற்றத்து மூவருக்கு தலா 5 ஆயிரம் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் மாநகரில் பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டிய மூவர், யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் மூவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை முற்படுத்தப்பட்டனர்.

பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி யாழ்ப்பாணம் மாநகரை அசுத்தப்படுத்தினர் என்ற குற்றச்சாட்டை மூவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் பொலிஸார் முன்வைத்தனர். சந்தேகநபர்கள் மூவரும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டனர்.

வழக்கை விசாரித்த நீதிவான் அந்தோணி சாமி பீற்றர் போல், மூவரையும் எச்சரித்துடன், தலா 5 ஆயிரம் தண்டம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.


Recommended For You

About the Author: ஈழவன்