க்ரைம் களத்தில் இறங்கும் பிக்பாஸ் புகழ் நடிகர்!

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் இறுதிப் போட்டி வரை தகுதி பெற்ற போட்டியாளர்களில் ஒருவர் கணேஷ் வெங்கட்ராமன்.

இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

ஹிந்தியில் மிகப்பெரும் புகழ்பெற்ற கிரைம் டிவி நிகழ்ச்சி ஒன்றின் தமிழாக்கம் விரைவில் தமிழ் சேனல் ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சேனலில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தியில் அனுப் சொனி என்பவர் மிக அருமையாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் அதே விறுவிறுப்புடன் கணேஷ் வெங்கட்ராமனும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதுகுறித்து கணேஷ் வெங்கட்ராமன் அளித்த பேட்டி ஒன்றில் கூறிய போது ‘தன்னுடைய தாத்தா ஒரு காவல்துறை அதிகாரி என்றும் தன்னுடைய தந்தை ஒரு வழக்கறிஞர் என்றும் இதனால் சட்டம் ஒழுங்கு மற்றும் கிரைம் குறித்த தகவல்கள் தமது ரத்தத்திலேயே ஊறி இருப்பதாகவும் இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியை தான் சிறப்பாக தொகுத்து வழங்க முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்

தமிழ் ஆடியன்ஸ்கள்  கணேஷ் வெங்கட்ராமன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

சோனி டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது


Recommended For You

About the Author: Editor