பிவி சிந்து சாம்பியன் கிளைமாக்ஸை மாற்றிய பிரபல நடிகர்!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து தங்கம் வென்று நாட்டிற்கே பெருமை சேர்த்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பிவி சிந்துவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ‘சிந்து’ என்ற பெயரில் தயாரித்து வரும் நடிகர் சோனுசூட், சிந்து சாம்பியன் பட்டம் வென்றதால் இந்த படத்திற்கு புதிய கிளைமாக்ஸ் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிவி சிந்து கேரக்டரில் தீபிகா படுகோன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் முன்னாள் பேட்மிண்டன் வீரர் கோபிசந்த் கேரக்டரில் நடிப்பதோடு இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளார் சோனுசூட்

இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியபோது, ‘பிவி சிந்துவின் இந்த வெற்றியை எதிர்பார்த்தேன். ஏற்கனவே சிந்துவின் வாழ்க்கை கதையின் ஸ்கிரிப்டை முடித்து விட்டோம்.

இந்த வெற்றியின் மூலம் எங்களுக்கு புது கிளைமாக்ஸ் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே வைத்திருந்த கிளை மாக்சை மாற்றி, புது கிளைமாக்ஸ் வைக்க இருக்கிறோம்.

இந்த படத்தில் கோபிசந்த்-ஆக நடிப்பதற்கு பயிற்சிப் பெற்று வரு கிறேன். எப்போதுமே, விளையாட்டு வீரர்கள் பற்றிய பயோபிக் சவால் நிறைந்ததுதான். இந்தப் படமும் அப்படித்தான் இருக்கும்.

ஆனால் சிறந்த படமாக இருக்கும். கடந்த 2 வருடமாக இந்தக் கதையோடு வாழ்ந்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor