‘மிஸ் இந்தியா’ கீர்த்தியின் அசத்தல் லுக்!

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மிஸ் இந்தியா திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.

மகாநடி திரைப்படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்ற கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் அடுத்தடுத்த படங்கள் பற்றிய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

அதிலும் அவர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் மிஸ் இந்தியா தெலுங்கு படம் பற்றிய எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. தற்போது இந்தப் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப் படம் கீர்த்தி சுரேஷின் 20ஆவது படமாக உருவாகிறது. ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை நரேந்திர நாத் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கிறார்.

சமீபத்தில் உடல் எடை குறைத்த கீர்த்தியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. கீர்த்தியின் இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு டீசரில் பதில் இருக்கிறது. உடல் எடையைக் குறைத்து அழகிப் போட்டிகளில் பங்கேற்கும் மாடலாக மாறியுள்ளார் கீர்த்தி.

டீசரில் மார்டன் ஆடையில் வலம்வரும் கீர்த்தி, ஹோம்லியாக விளக்கேற்றவும் செய்கிறார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜெகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

தெலுங்கு படங்களைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் மைதான் என்ற பாலிவுட் படத்தில் அஜய் தேவ்கானுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.


Recommended For You

About the Author: Editor