கிழக்கு மாகாணத்திலே மிகப்பெரிய புத்தர் சிலை

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் தமிழர் பகுதியை பிடிக்கும் போது ஆனால் பௌத்த பிக்குகளோ முஸ்லிம்களின் வளமான இடங்களை கைப்பற்றி வருகின்றார்கள் .

அம்பாரை மாவட்டம் முஸ்லிம்களின் மாவட்டம் எனும் கருத்தியலை சிதைக்கும் முகமாக அம்பாரை தேர்தலை தொகுதியை மையப்படுத்தி அருகிலுள்ள மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ பிரதேசங்களின் சிங்கள குக்கிராமங்களையும் அதனோடு பதுளை மாவட்டத்தே அண்டிய பிபிலை சார்ந்த கிராமங்களை இணைத்து சிங்கள வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து 

அம்பாரை மாவட்டத்தின்  1சிங்கள பாராளமன்ற உறுப்பினர் வந்த எண்ணிக்கையை மூன்றாக மாற்றும் அளவு சடுதியாக சிங்களவாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

.அம்பாரை தேர்தல் தொகுதி சிங்களவரின் பிறப்பு வீதத்தால் அதிகரித்தவை அல்ல அண்மையிலுள்ள மற்றைய சிங்கள பெரும்பான்மை மாவட்டதீதை சேர்ந்த சிங்கள ஊர்களை சத்தமில்லாமல் இணைத்துக்கொண்டு வீட்டுத்திட்டங்களை வழங்கி வருகின்றார்கள் .


இதே போல் திருகோணமலை மாவட்டத்தில் தமிழரின் போரின் இடப்பெயர்வு மற்றும் இந்தியாவில் அகதியாக உள்ளதால் தமிழரை விட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளார்கள்.

இங்கும் முஸ்லிம்களை விட சிங்கள வாக்காளர்களை அதிகரிக்கும் முகமாக குச்சவெளி பகுதியிலுள்ள அரிசிமலை புல்மோட்டை போன்ற பகுதிகளை இலக்கு வைத்து அநுராதபுர மாவட்ட சில சிங்களவரை குடியேற்றும் திட்டம் மூலம் முஸ்லிம்களின் விகிதத்தை பின்னுக்கு தள்ளும் நிலை உள்ளது .

விடுதலைப்புலிகள் களமுனையில் இருந்த போது சேருவில எனும் சிங்கள குடியேற்றத்தை தடுப்பதில் கவனம் செலுத்தி சிவில் பாதுகாப்பு படை எனும் சிங்கள ஆக்கிரமிப்பாளரை தாக்கியழித்தார்கள் ஆனால் இப்பொழுது யார் இவர்களை கட்டுப்படுத்துவது எனும் அவலம் உள்ளது

கிழக்கில் மற்றைய மாவட்டமான மட்டக்களப்பின் வெல்லாவெளியையும் ,செங்கலடி மகாஓயா அண்டி புதிய சிங்களவரின் குடியேற்றங்கள் விகாரைகள் அமைக்கும் பணி துரிதமாக இடாம்பெற்றுவருகின்றது

இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள பாராளமன்ற உறுப்பினர் இல்லாத நிலையில் சிங்களவரின் குடியேற்றத்தால் போரைதீவு பிரதேசசபையில் ஒரு சிங்கள உறுப்பினர் செங்கலடீ பிரதேச சபையில் ஒரு உறுப்பினர் வரும் அளவு கனிசமான வாக்காளர் உள்வாங்கியுள்ளார்கள் .

இப்பொழுது கிழக்கு மாகாணம் சிங்களவரின் மாகாணமாக உருவாக முழுக்காரணம் முஸ்லிம் அரசியல்வாதிகளின் அடிமை மனப்பான்மை தமிழரையும் விடுதலைப்புலிகளையும் குறைகூறி சிங்களவரால் விழுங்கப்படும் கிழக்கை காப்பாற்ற எந்த ஒரு செயற்பாடு கூட இல்லை .கிழக்கு மாகாணம் வடக்கு உடன் இணையுதோ இல்லையோ ஆனால் மொன்றாகலை ,பதுளை மாவட்டத்துடன் இணைந்து சிங்கள மாகாணம் உருவாகிவிட்டது .

இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் மிகப்பெரிய புத்தர் சிலை அமைக்கும் முகமாக புல்மோட்டையின் அரிசிமலை கிராமம் தேர்வு செய்து பௌத்தரின் ஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது.


Recommended For You

About the Author: Editor