அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற இலங்கையர் சுட்டுக்கொலை!

அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இலங்கையர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கலிபோர்னியா ஒக்லாந்தின் Uptown பகுதியில் கொள்ளை சம்பவம் ஒன்றின் போது இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸாரால் சந்தேகிக்கப்பட்ட போதிலும் அதனை அவர்களால் உறுதி செய்ய முடியவில்லை.

இந்த சம்பவத்தில் 32 வயதான ஜனாத் லியனகே என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

இலங்கையில் பிறந்த அமெரிக்கர் மீது இரவு 11:13 மணியளவில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர் அதிகாலை 1.01 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லியானகே தனது வாகனத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, அவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர் ஏன் ஒக்லாந்தில் இருந்தார் எனவும், அந்த பகுதிக்கு வருவதற்கான காரணம் என்ன என்பதில் குழப்பமாக உள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டின் நோக்கம் கொள்ளை என நிரூபிப்பதற்கு போதுமான ஆதரங்கள் இல்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எனினும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor