குழந்தையை மறந்து திருடிய பொருளுடன் தப்பிச் சென்ற பெண்!

வெளிநாடொன்றில் குழந்தையை வைத்து அழைத்து செல்லும் வண்டியை கடையில் இருந்து திருடி சென்ற பெண், தனது குழந்தையை கடையிலேயே மறந்து விட்டுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

நியூஜெர்சியின் மிடில்டவுன் பகுதியில் உள்ள பாம்பி பேபி என்ற கடைக்கு 3 பெண்கள் குழந்தைகளுடன் சென்றுள்ளனர்.

அதில் இரண்டு பெண்கள் கடை ஊழியரிடம் பேச்சுக் கொடுத்த போது, மற்றொரு பெண் குழந்தையை வைத்து அழைத்து செல்லும் வண்டியை கடையில் இருந்து திருடி சென்றுள்ளார்.

பின்னர், அவர்கள் அந்த கடையில் இருந்து சென்றுவிட்ட பிறகு, அவர்களுள் கடையிலேயே தனது குழந்தையை மறந்து விட்டுச்சென்ற பெண் 6 நமிடங்களுக்கு பின் மீண்டும் கடைக்கு வந்து குழந்தையை அழைத்து சென்றுள்ளார்.

இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அதன் அடிபடையில் 3 பெண்களுள் 2 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

கடையில் இருந்து திருடப்பட்ட வண்டி கடை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை கூட மறந்துவிட்டு வண்டியை பெண்கள் திருடிச்சென்றது அதிர்ச்சியளிப்பதாக கூறிய அந்த கடையின் உரிமையாளர், ஒன்றும் அறியாத குழந்தையை வைத்துக் கொண்டு இது போன்ற சம்பவத்தில் யாரும் இனி ஈடுபட கூடாது என்பற்காக சிசிடிவி காட்சிகளை பகிர்வதாக கூறினார்.


Recommended For You

About the Author: Editor