கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து எஸ்.பி. நீக்கம்!!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து எஸ்.பி.திசநாயக்க நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அந்த பதவிக்கு லசந்த அலகியவண்ண நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (திங்கட்கிழமை) மாலை கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெற்றது.

இதன்போதே குறித்த முடிவு எட்டப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

அத்தோடு கட்சியின் மூத்த துணைத் தலைவராக ரஞ்சித் சியம்பலபிட்டியவும், ஊடகப் பேச்சாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவுக்கு பதிலாக வீரகுமார திசனாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கட்சியின் நடத்தை விதிகளை மீறிய பொது பிரதிநிதிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor