முப்படைகளுக்கும் நீர்க்காகம் பயிற்சி.

21 ஆவது நூற்றாண்டில் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு எச்சரிக்கையின் போது அரச விரோத மற்றும் தீவிரவாத சவால்களுக்கு முகங்கொடுப்பது தொடர்பில் இமமுறை இடம்பெறும் “நீர் காகம்’ அப்பியாச பயிற்சிகளில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில், இலங்கை இராணுவத்தினால் 10ஆவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டடுள்ள முப்படையினர் பங்குப்பற்றும் “நீர் காகம்’ அப்பியாச பயிற்சிகளில் வெளிநாட்டு படையினர் 100 பேரும், இலங்கை இராணுவத்தினர் 2400 பேரும், கடற்படையினர் 400 பேரும், விமானப் படையினர் 200 பேரும் பங்கேற்கவுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி நிறைவடைய இருக்கும் இந்த அப்பியாச பயிற்சிகள், அவசர காலகட்டத்தில் படையினர் கூட்டாக இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள கூடிய நோக்கத்தில் கிழக்கு, மத்திய, மேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெளிநாட்டு இராணுவத்தினருடன் இணைந்து மேற்கொள்ளும் இந்த அப்பியாச பயிற்சிகள் சிறந்த அனுபவத்தை பெற்றுத்தரும்.
மின்னேரியவில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை தலைமையகத்திலிருந்து இந்த அப்பியாச பயிற்சிகள் செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

விஷேட நடவடிக்கை இராணுவ தந்திர உபாயம் மேற்கொள்ளும் இந்த அப்பியாச பயிற்சியில் இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படையணி, விஷேட படையணி, எயார் மொபைல் படையணி, பொறிமுறை காலாட் படையணி, கடற்படையினர் மற்றும் விமானப் படையினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மலேசியா, மாலைதீவு, நேபாளம், ரஷியா, அமெரிக்கா, பங்களாதேஷ், சீனா, பிரான்ஸ், இந்தியா, ஈரான், பாகிஸ்தான், ஜக்கிய இராச்சியம் மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளை சேர்ந்த இராணுவத்தினர் இந்த அப்பியாச பயிற்சியில் பங்கேற்றவுள்ளனர்.” என்றார்.


Recommended For You

About the Author: ஈழவன்