இனவாதம் – மதவாதம் கொண்டு ஆட்சியை கைப்பாற்ற முயற்சி!!

இனவாதத்தையும் மதவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கின்ற அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளினாலேயே இன்று பாதுகாப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்பேதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்களிடையே காணப்பட்ட அமைதி சீர்குலைந்து தற்போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட அபிவிருத்தி பணிகளும் தடைப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மக்களிடையே சிந்திக்கும் ஆற்றலையும், முறையான தீர்மானங்களை எடுப்பதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்துவது அவசியமாகும்.

அவ்வாறில்லாவிட்டால் மீண்டும் நாட்டில் வன்முறை சம்பங்கள் தோற்றம்பெற வழிவகுக்கும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: Editor