வவுனியாவில் இடம்பெற்ற அடி தடி

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்றையதினம் மோதல் சம்பவங்கள் மற்றும் கைகலப்பு காரணமாக காயமடைந்த பெண் உட்பட ஐந்து பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 6 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அந்தவகையில், வவுனியா நெளுக்குளம், தோணிக்கல், ஈரப்பெரியகுளம், மெனிக்பாம், ஆகிய பகுதிகளில் உள்ள சில குழுக்கள் மற்றும் சில நபர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பெண் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.

அதில் தோணிக்கல் பகுதியில், இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவர் தனது காணியில் குடியேற நடவடிக்கைகள மேற்கொண்ட போது அருகில் வசித்தவர்களினால் காணிப் பிரச்சினை தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் வவுனியா, செட்டிகுளம், ஈரப்பெரியகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: Ananya