சிவரூபநிடமிருந்து ஆயுதங்கள் மீட்பு ?

பயங்கரவாத தடுப்பு பிரிவினால் (TID) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனிடமிருந்து மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

வைத்தியரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ,  AK 47 துப்பாக்கி, 120 தோட்டாக்கள், 11 கைத்துப்பாக்கி ரவைகள், PE10 என சந்தேகிக்கப்படும் 10 கிலோ வெடிமருந்து, தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை TID யினர் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேகநபரின் மூலம் பளை, பிரதேசத்தில் வைத்து குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்வதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) இரவு பளை வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி வைத்தியர் சின்னையா சிவரூபன் கைது செய்யப்பட்டிருந்தார்.

3 பிள்ளைகளின் தந்தையான, 41 வயதான சிவரூபன் கடமை நிமித்தம் வைத்தியசாலைக்கு செல்லும்போது, ஆணையிறவில் வைத்து, இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, TID யிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்


Recommended For You

About the Author: ஈழவன்