ஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

இன்றுள்ள பெரும்பாலானோர் ஆவி பிடிப்பதை மறந்து வருகிறோம். சளி பிடித்தால் மட்டுமே சளி நீங்க ஆவி பிடிப்பதாக நாம் திரைப்படங்களில் கண்டிருப்போம். இதனை தவித்து உள்ள ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இனி காண்போம்.

நமது முகத்தில் இருக்கும் அழுக்குகள் விரைவில் வெளியேறி செல்வதற்கு ஆவி பிடித்தல் ஒரு அருமையான செயலாகும். ஆவி பிடிக்கும் முன்பும் – பின்னரும் முகத்தை சுத்தமான துணியால் துடைப்பத்தால்., முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் எளிதில் வெளியேறும்.

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகள் எளிதில் நீங்கும். சுமார் 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை ஆவி பிடித்தல் மூக்கில் இருக்கும் வெள்ளையான திட்டுகள் நீங்கும். கரும்புள்ளிகள் வேரோடு வெளியேறும்.

முகத்தில் இருக்கும் பருக்கள் எளிதில் குறையும். ஆவிபிடிக்கும் பொது முகத்தில் இருக்கும் எண்ணெய் சுரப்பியில் இருந்து சருமத்திற்கு நல்ல எண்ணெயால் ஆவி பிடிக்கப்படுவதால்., துளைகளில் இருக்கும் அழுக்குகளும் எண்ணெய் தன்மையால் எளிதில் வெளியேறும்.

முகத்தில் சிலருக்கு ஏற்பட்டு இருக்கும் முதுமை தோற்றத்தை தடுத்து., சருமத்தில் அழுக்குகள் தேங்காமல் பார்த்து கொள்ளும். முகம் பளிச்சென்று மாறுவதோடு., அழுக்குகள் வெளியேறி இளமை தோற்றமானது ஏற்படும்.

முகத்தில் பருக்கள் இருந்தால் 5 நிமிடம் ஆவி பிடித்து., அரை மணி நேரம் கழித்து முகத்தை ஐஸ் கட்டியால் தேய்க்க முக பருக்கள் எளிதில் உடையும். இதனால் முகத்தின் இரத்த ஓட்டம் சரியாகி., உடலுக்கு நன்மை ஏற்படும். சருமமும் நல்ல அழகுடன் இருக்கும்.


Recommended For You

About the Author: Ananya