ஒரு கொசு கடித்ததால் பெண் ஒருவருக்கு நடந்த சம்பவம்

கொசு கடித்ததால் இளம்பெண் ஒருவர் கோமா நிலைக்கு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியா எஸ்செக்ஸ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கிம் ராபின்சன்(25).

இவர் தனது உடைகளை துவைத்து வீட்டிற்கு பின்புறத்தில் உலர வைத்துள்ளார். இதனால் கொசு அங்கு அதிகமாக காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், துணி காய வைப்பதற்காக சென்ற கிம் ராபின்சனை கொசு கடிக்கவே, கொசு கடித்த இடத்தில் அதிக அளவில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், மறுநாள் கால் முழுவதும் பயங்கரமாக வீக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குடும்பத்தார்கள் கிம் ராபின்சனை மருத்துமவனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் கொசு கடித்த காயத்தின் வழியே ஆபத்தான கிருமிகள் உடலுக்குள் நுழைந்த நிலையில் உடல் முழுவதும் பயங்கரமாக வீங்க ஆரம்பித்தது.

இதனை தொடர்ந்து அவரது உடலை மருத்துவர்கள் பரிசோதனை செய்த நிலையில் கொசு கடித்ததன் மூலம் உடலில் நச்சுக்கிருமி பரவியதால் அவரது காலை முழுவதும் அகற்ற வேண்டியிருக்கும் என கூறியுள்ளனர்.

பின்பு, அறுவை சிகிச்சை மூலம் கால் அகற்றப்பட்ட நிலையில், மீண்டும், அவரது உடல் முழுவதும் நச்சுக்கிருமி பரவியுள்ளது.

இதனால், இதயத்துடிப்பு நின்றுள்ளது. அவர் இறந்து போய்விட்டதாக மருத்துவர்கள் கருதிய நிலையில் திடீரென மூன்று நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் அவரது இதயம் துடிக்கத் தொடங்கியுள்ளது.

பின்னர், கோமா நிலைக்கு சென்ற கிம் ஐந்து நாட்களுக்கு பிறகு எழுந்துள்ளார்.

ஒரு கொசு கடித்து ஒரு உயிரிழக்கும் தருணம் வரை சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவரது கால்களை முழுவதும் சரிசெய்ய இன்னும் சில அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Ananya