உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ள பூங்கா

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் பல நாட்களாக உடைந்த நிலையில் காணப்படுகின்றது.

எனினும் அதில் சிறுவர்கள் விளையாடி வருகின்ற நிலையில் அது மிகவும் ஒரு ஆபத்தானது சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த உடைந்த விளையாட்டு உபகரத்தின் மூலம் அங்கு விளையாடும் சிறுவர்களிற்கு உயிர் ஆபத்தும் ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

எனவே சபந்தப்பட்டவர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி உடனடியாக அதனை மாற்றி அமைக்குமாறு உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை குறித்த கல்லடி சிறுவர் பூங்காவானது மட்டக்களப்பு மாநகர சபைக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Ananya