தாயின் தவறான முடிவு குழந்தைகளின் நிலமை

பீகார் மாநிலத்தில் 35 வயது தாய் தன்னுடைய மூன்று குழந்தைகளுடனும் ரயில்முன் பாய்ந்து த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் பாட்னா-கயா பகுதிகளுக்கு இடைப்பட்ட ரயில் தண்டவாளத்தில் நேற்று மதியம், மூன்று வயது குழந்தை மழையில் நனைந்தபடியே அழுதுகொண்டிருந்துள்ளது.

சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், குழந்தையின் அருகே 35 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் அவருடைய இரண்டு ஆண் குழந்தைகளின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் காயங்களுடன் உயிர்தப்பிய குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், குழந்தைகள் உடுத்தியிருந்த ஆடைகள் கந்தலாக காணப்பட்டது. இதனால் வறுமை அல்லது வீட்டில் ஏற்பட்ட மனக்கசப்பால் குழந்தைகளுடன் சேர்ந்து அவர்களுடைய தாய் தற்கொ லை செய்துகொண்டிருக்கலாம்.

இறந்தவர்களை பற்றிய அடையாளம் இதுவரை கண்டறிப்படவில்லை. அதனை கண்டுபிடிப்பதற்கான தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்


Recommended For You

About the Author: Ananya