மீண்டும் பதவியேற்பார்கள் விலகிய முஸ்லிம் அமைச்சர்கள்

அமைச்சுப்பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்றால் அவர்கள் ஒரு மாத காலத்தின் பின்னர், மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தற்போது சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. அமைச்சரவை இது சம்பந்தமாக கலந்துரையாடியது. முறைப்பாடுகள் இருந்தால், அதனை முன்வைக்க மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரிசார்ட் பதியுதீன், அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் சம்பந்தமாக முறைப்பாடுகளை முன்வைக்க மூன்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழு, பொலிஸ் தலைமையகத்தில் நியமிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்காதவர்களை மீண்டும் அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்பார்கள்” என தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor