முடங்கிய இருதய சத்திர சிகிச்சைப் பிரிவை இயக்க ஆளுநர் உறுதி!

யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சைகள் கடந்த 3 வாரங்களாக முடங்கிய நிலையில், நோயாளர்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இருதய அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளர்கள் காத்திருக்கும் நிலைமையில், கடந்த 3 வாரங்களாக சத்திர சிகிச்சைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இருதய அறுவைச்சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக பதிவு செய்யப்பட்ட, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் இலட்சக்கணக்கான பணத்தை செலுத்தி சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதில் உள்ள தடங்கல்கள் தொடர்பில் இன்று (26) கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், ஶ்ரீலங்கா தமிழர் ஒன்றியத்தின் செயலாளருமான உமாச்சந்திரா பிரகாஷ் வட மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய வட மாகாண ஆளுநர், யாழ். போதனா வைத்தியசாலையில் முடங்கிய இருதய சத்திர சிகிச்சைப் பிரிவை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்


Recommended For You

About the Author: Ananya