உங்கள காலி பண்றதுதான் என் பிளான்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கவினை அவருக்கு நெருக்கமானவர்களே நாமினேஷன் செய்துள்ள நிலையில் கவின் புதிய அவதாரம் எடுத்துள்ளதாக தெரிகிறது

இதுவரை நட்புக்கும் நண்பர்களுக்கும் விட்டுக்கொடுத்தவர் தற்போது டைட்டிலை ஜெயிக்க களமிறங்கிவிட்டார் என்று தெரிகிறது. நண்பர்களுக்காக விட்டுக்கொடுப்பேன் என்று தான் சொல்லவில்லை, நண்பர்களை விட்டு கொடுக்க மாட்டேன் என்பது மட்டுமே தனது எண்ணம்.

என்று கூறும் கவின், இந்த போட்டியில் நான் பர்ஸ்ட் வர முடிவு செய்துவிட்டதாகவும், உங்கள் எல்லோரையும் அடிச்சு தூக்கிவிட்டு முன்னால் செல்ல முடிவு செய்துவிட்டதாகவும், என்னை பத்தி எல்லோரும் என்ன நினைச்சுகிட்டு இருக்கிங்க, உங்க எல்லோரையும் காலி செய்துவிட்டு போறேனா? இல்லையான்னு பாருங்க என்று ஆவேசமாக பேசுகிறார்

கவின் இவ்வாறு பேசியதை சேரன் அதிர்ச்சியுடனும், லாஸ்லியா புன்சிரிப்புடனும், சாண்டி சவாலுக்கு தயார் என்பது போலவும் பார்த்து வருகின்றனர். இந்த உரையாடலில் இருந்து போட்டி இனிமேல் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


Recommended For You

About the Author: Editor