ஜிவி பிரகாஷின் ‘டக்கரு பார்வை’ ரிலீஸ்

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் சுமார் பத்து படங்களில் நடித்துக் கொண்டு வருவதால் அவர் நடிக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள், புரமோஷன்கள் தினமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் நேற்று அவர் நடித்து வரும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் பர்ஸ்ட்லுக் வெளிவந்தது. அதேபோல் இன்று அவர் நடித்து வரும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் பிரமோஷன் வீடியோ வெளியாகியுள்ளது

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் இன்னொரு படமான ‘ஐங்கரன்’ என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றின் லிரிக் விடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டக்கரு பார்வை’  என்று தொடங்கும் இந்த பாடல் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

அதர்வா நடித்த ‘ஈட்டி’ படத்தை இயக்கிய ரவிஅரசு இந்த படத்தை இயக்கியுள்ளார். லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், மஹிமா நம்பியார், காளி வெங்கட், ஆடுகளம் நரேன், யோகிபாபு, மயில்சாமி,  உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் சானு வர்கீஸ் ஒளிப்பதிவில் ராஜா முகமது படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது


Recommended For You

About the Author: Editor