‘நம்ம வீட்டு பிள்ளை அட்டகாசமான அப்டேட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘எங்க அண்ணன்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த பாடலை அடுத்து பலர் தங்கள் சமூக வலைதளங்களில் அண்ணன்கள் குறித்த பதிவுகளை பதிவு செய்து இந்த பாடலுக்கு பெருமை சேர்த்தனர்

இந்த நிலையில் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘மைலாஞ்சி’ என்ற பாடல் ஆகஸ்ட் 28ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

முதல் பாடலைப் போலவே இந்த இரண்டாம் பாடலையும் இசையமைப்பாளர் டி.இமான் ரசிகர்களை கவரும் வகையில் கம்போஸ் செய்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சிவகார்த்திகேயன், அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்டி நட்ராஜ், அர்ச்சனா, யோகி பாபு, சூரி, ஆர்கே சுரேஷ், ஆடுகளம் நரேன், ரமா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது


Recommended For You

About the Author: Editor