அமேசன் காட்டுத்தீயால் அழிவடையும் அரியவகை உயிரினங்கள்

அமேசன் காட்டுத்தீயினால் அரியவகை பாம்புகள் அழிவடையும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரியவகை பாம்புகள் வாழ்விடங்களை விட்டு வெளியேறுதாகவும், பல வகையான பாம்புகள் அழியும் நிலையில் இருப்பதாகவும் வன உயிரின ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

உலகளவில் மிகவும் பிரபலமான காடு பிரேசிலின் அமேசன் காடு ஆகும். இந்த அமேசான் காடு பிரேசில், கொலிம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவி இருக்கிறது.

இவற்றில் அதிகளவில் பிரேசிலில் அமேசன் காடு உள்ளது. இந்தக் காட்டில் பல அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. அண்மையில் இந்தக் காடுகளில் அதிகளவில் காட்டுத் தீ பரவி வருகிறது.

இந்நிலையில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அரிய வகை உயிரினங்கள் அழியும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வனஉயிரின ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, தீயை அணைக்கும் முயற்சியில் இராணுவப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 24ஆம் திகதி வரை ஒரு மாதத்துக்கு தீயணைப்புப் பணியில் இராணுவத்தினர் ஈடுபடுவர் என பிரேசில் அறிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor