நாளை அமிர்தலிங்கத்தின் பிறந்ததின விழா!

தமிழ்ப் பெரும் தலைவரும் இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க் கட்சித் தலைவருமாகிய அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 92-வது பிறந்தநாள் விழா நாளை (26) மாலை 3 மணிக்கு பண்ணாகம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

பண்ணாகம் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர் விஸ்வ மகாதேவன் தலைமையில் இடம்பெறவுள்ள இவ்விழாவில் முன்னாள் பாராளுமன்ற எதிர் கட்சித் தலைவரின் செயலாளர் இ.பேரின்பநாயகம் நினைவுப் பேருரையை ஆற்றவுள்ளார்.

மேலும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஈஸ்வரபாதம் சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வலிகாமம் மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன், வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் தர்மலிங்கம் துரைலிங்கம், அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை தலைவர் க.கௌரிகாந்தன் மற்றும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் ஆகியாேர் நினைவுரைகளை ஆற்றுகின்றனர்.

வரவேற்புரையை பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரும் வைத்திய கலாநிதியுமான ஆனந்தமூர்த்தியும், நன்றியுரையை பண்ணாகம் அண்ணா கலை மன்றத் தலைவர் தி.குகலிங்கமும் நிகழ்த்தவுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor