ஹங்வெல்லையில் துப்பாக்கிச் சூடு!

ஹங்வெல்லை – பஹத்கம பகுதியிலுள்ள வீடொன்றில் இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.30 மணிளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 43 வயதான வர்த்தகர் ஒருவரும் 32 வயதான அவரது உதவியாளருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்த இரண்டு பேரால் குறித்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor