‘ஸ்பைடர் மேன்’ உடன்படிக்கைகள் இரத்து

‘ஸ்பைடர் மேன்’ திரைப்­ப­டங்­களை இணைந்து தயா­ரிக்கும் நட­வ­டிக்­கையை சோனி நிறு­வ­னமும், டிஸ்னி நிறு­வ­னமும் கைவிடத் தீர்­மா­னித்­துள்­ளன. இத்­தி­ரைப்­ப­டங்­களின் முத­லீடு, வரு­மானப் பங்­கீடு தொடர்­பான புதிய உடன்­ப­டிக்­கைக்­கான இணக்­கப்­பாடு எட்­டப்­ப­டா­மையே இதற்குக் காரணம்.

ஸ்பைடர்மேன், கெப்டன் அமெ­ரிக்கா, அயன் மேன், ஹல்க், தோர், டேர்­டெவில், வொல்­வரின் போன்ற சுப்பர் ஹீரோ பாத்­தி­ரங்­களை மார்வெல் கொமிக்ஸ் நிறு­வனம் கார்ட்டூன் கதை­க­ளாக உரு­வாக்­கி­யது. பின்னர் மார்வெல் ஸ்டூடியோஸ் நிறு­வனம் மூலம் இப்­பாத்­தி­ரங்­களின் அடிப்­ப­டையில் திரைப்­ப­டங்­களும் தயா­ரிக்­கப்­பட்­டன.

மார்வெல் கொமிஸின் முதன்­மை­யான பாத்­தி­ரங்­களில் ஒன்­றாக ஸ்பைடர் மேன் விளங்­கு­கி­றது. எனினும், ஸ்பைடர் மேன் திரைப்­ப­டங்­களைத் தயா­ரிக்கும் உரி­மையை 1999 ஆம் ஆண்டு சோனி நிறு­வனம் வாங்­கி­யது.

பின்னர், ஸ்பைடர் மேன் பாத்­தி­ரங்கள் கொண்ட திரைப்­ப­டங்­களை இணைந்து தயா­ரிப்­பது தொடர்பில் 2015 ஆம் ஆண்டு மார்வெல் ஸ்டூடியோஸ் மற்றும் அதன் தாய் நிறு­வ­ன­மான டிஸ்னி நிறு­வ­னத்­துடன் சோனி நிறு­வனம் ஒப்­பந்தம் செய்­தது.

அதன் பின்னர், கெப்டன் அமெ­ரிக்கா சிவில் வோர், ஸ்பைடர் மேன், ஹோம் கமிங், அவேஞ்சர்ஸ் இன்­பி­னிட்டி வொர், அவேஞ்சர்ஸ், என்ட் கேம், ஸ்பைடர் மேன், ஃபார் ப்ரொம் ஹோம் முத­லான படங்கள் தயா­ரிக்­கப்­பட்­டன.

இந்­நி­லையில் புதிய ஸ்பைடர் மேன் படங்­களின் முத­லீடு தொடர்­பாக இரு நிறு­வ­னங்­களும் நடத்­திய பேச்­சு­வார்த்தை வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. இதனால் இரு நிறு­வ­னங்­களும் ஸ்பைடர் மேன் படங்­களை இணைந்து தயா­ரிப்­ப­தில்லை என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்நிலையில், சோனி நிறுவனம் தனியாக தயாரிக்கும் ஸ்பைடர் மேன் படங்கள் முந்தைய படங்களைப் போல் இருக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்