ஐக்கிய அமெரிக்க டெனிஸ் போட்டிகள் ஆரம்பம்.

வரு­டத்தின் கடைசி மாபெரும் டென்னிஸ் (க்ராண்ட் ஸ்லாம்) போட்­டி­யான ஐக்­கிய அமெ­ரிக்க பகி­ரங்க டென்­னிஸ்ஸின் ஆடவர் ஒற்­றையர் பிரிவில் நடப்பு சம்­பியன் நொவாக் ஜோகோவிச், முன்னாள் சம்­பி­யன்­க­ளான ரபாயல் நடால், ரொஜர் பெடரர் ஆகியோர் இவ் வருடம் சம்­பியன் பட்­டத்­துக்கு குறி­வைத்து விளை­யா­ட­வுள்­ளனர்.

அதே­வேளை மகளிர் ஒற்­றையர் பிரிவில் 6 தட­வைகள் சம்­பி­ய­னான செரீனா வில்­லி­யம்ஸும், 13 வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஐக்­கிய அமெ­ரிக்க சம்­பி­ய­னா­ன­வ­ர் மரியா ஷர­போ­வாவும் முதல் சுற்­றி­லேயே (நாளை) சந்­திக்கும் துர்ப்­பாக்­கிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

யார் தோற்­றாலும் வெளி­யேற நேரிடும் என்­பதால் செரீ­னாவும் ஷர­போ­வாவும் பர­ப­ரப்­புடன் முதல் சுற்றை எதிர்­கொள்­ள­வுள்­ளனர். நியூயோர்க், ஐக்­கிய அமெ­ரிக்க டென்னிஸ் சங்க பில்லி ஜீன் கிங் தேசிய டென்னிஸ் அரங்கில் ஐக்­கிய அமெ­ரிக்க பகி­ரங்க டென்னிஸ் 2019 இன்று நடை­பெ­ற­வுள்ள முதலாம் சுற்று ஆட்­டங்­க­ளுடன் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இரு­பா­லா­ருக்­கு­மான ஒற்­றையர், இரட்­டையர், கலப்பு இரட்­டையர், சக்­கர இருக்கை, கனிஷ்ட போட்­டிகள் ஆகி­யன நடை­பெ­ற­வுள்­ளன. இவற்றில் பிர­தான சுற்­று­களில் ஒன்­றான ஆடவர் ஒற்­றையர் பிரிவில் ஜோகோவிச், நடால், பெடரர், டொமினிக் தியெம், நிக் கிர்­கியோஸ் ஆகிய ஐவரில் ஒருவர் சம்­பி­ய­னா­கலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

மகளிர் ஒற்­றையர் பிரிவில் நடப்பு சம்­பியன் ஜப்­பானின் நயோமி ஒசாக்கா, ஏஷ்லி பார்ட்டி, கெரோ­லினா ப்ளிஸ்­கோவா, சிமோனா ஹாலெப், எலினா ஸ்வெட்­டோ­லினா, பெட்ரா கெவிட்டோவா, செரினா வில்லியம்ஸ் ஆகியோரிடையே சம்பியன் பட்டத்துக்கு கடும் போட்டி நிலவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்