பேராயரின் நியா­ய­மான கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­படும்

பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையின் நியா­ய­மான கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­பட வேண்டும். எமது ஆட்­சியில் குண்­டுத்­தாக்­குதல் தொடர்பில் சுயா­தீன விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு கட­மை­யை தவ­ற­விட்ட அனை­வரும் சட்­டத்தின் முன் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள் என பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

நேற்­றைய தினம் இந்த விடயம் குறித்து விசேட அறிக்­கை­யினை வெளியிட்­டுள்ள கோத்­தா­பய ராஜ­பக்ஷ அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் தொடர்பில் கத்­தோ­லிக்க ஆயர்கள் சபை மற்றும் பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்ஜித் ஆண்­டகை ஆகியோர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கைகள் குறித்து கவனம் செலுத்­தினேன். முழு நாடும் கவலை கொள்ளும் வகையில் இடம்பெற்ற இத்­தாக்­கு­த­லினால் பாதிக்­கப்­பட்ட அப்­பாவி மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­டா­மை­யினால் மனம் வருந்­திய நிலை­யிலே, பேராயர் அவ்­வா­றான கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்றார்.

உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய நபர்கள் பின்­ன­ணியில் இருந்து சூழ்ச்சி செய்­த­வர்கள், அமைப்­புக்கள் அதற்கு அனு­ச­ரணை வழங்­கி­ய­வர்கள், தாக்­கு­தலை தடுக்­காது கட­மை­யினை துஷ்­பி­ர­யோகம் செய்­த­வர்கள், சந்­தேக நபர்­களை கைது செய்­யாத நிலை, சட்­டத்தின் முன் தண்­டிக்­கப்­பட வேண்­டி­ய­வர்கள் விடு­விக்­கப்­பட்­டமை போன்ற நிலை­க­ளுக்கு நீதி கிடைக்க வேண்­டு­மாயின் சுயா­தீ­ன­மான அதி­கா­ர­மிக்க ஆணைக்­குழு ஸ்தாபிக்­கப்­பட வேண்டும் என கோரிக்கை விடுக்­கின்­றனர்.

அதே­போன்று எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான தாக்­கு­தல்கள் இடம்பெறாத வகையில் முன்­னெ­டுக்க கூடிய நட­வ­டிக்­கைகள் தொடர்­பிலும் அவர்கள் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர். 30 வருட கால சிவில் யுத்­தத்தை குறு­கிய 3 வருட காலத்­திற்குள் நிறை­விற்கு கொண்டு வந்­த­வர்கள் என்ற வகையில் முன்­வைக்­கப்­படும் கோரிக்­கை­களை புரிந்துகொள்ள முடி­கின்­றது. பேரா­யரின் கோரிக்­கை­யினை அர­சாங்கம் நிறை­வேற்ற வேண்டும் என்­பது பிர­தான நிலைப்­பா­டாகும்.

எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக செயற்­பட்ட காலப்­ப­கு­தியில் அவ­ருடன் இணைந்து நாட்டில் யுத்­தத்தை நிறைவு செய்து அச்­ச­மின்றி வாழக் கூடிய சூழலை உரு­வாக்­கினோம். அவ்­வ­கையில் பேராயரின் சுயாதீன ஆணைக்குழு ஒன்றுக்கான நியாயமான கோரிக்கை எமது அரசாங்கத்தின்கீழ் நிறைவேற்றப்படும். அதே போன்று பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதம் அற்ற நாடொன்றை உருவாக்குவேன். நாட்டில் அச்சமற்ற சூழலை உருவாக்குவேன்.


Recommended For You

About the Author: Ananya