அவுஸ்ரேலியாவின் கிழக்கு முழுவதும் பனிப்பொழிவு!

அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பனிப்பொழிவு உச்ச அளவை எட்டியுள்ளது.

இதன்காரணமாக குறித்த பகுதிக்கு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு அவுஸ்ரேலியா முழுவதும் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வாறான மோசமான நிலைமை ஏற்பட்டிருக்கவில்லை என அவுஸ்ரேலிய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

சிட்னி உள்ளடங்களாக கிழக்கு கடற்கரைப் பிராந்தியத்தில் ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலமான காற்று மற்றும் மழையில் இருந்து தப்பிப்பித்துக் கொள்வதற்காக பொதுமக்களை வீடுகளிலுள் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிறிஸ்பேனுக்கு தென்மேற்கு திசையில் 220 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஸ்டான்தோர்ப் நகரில், பனிப்பொழிவு அதிகமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நகரம் ஏறக்குறைய உறை நிலையில் உள்ளதாகவும், வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிட்னி துறைமுகத்தில் இருந்தான படகுச்சேவைகளும் சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor