பிரித்தானிய மகாராணிக்கு பிடித்த உணவு இது தான்!

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு பிடித்த உணவு வகைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இனி அவருக்கு பிடித்த உணவுகள் பற்றிப்பார்க்கலாம்….
மதிய நேர உணவை எலிசபெத் ராணி சாப்பிடுகிறாரோ அப்போது அவருக்கு வகைவகையான உணவெல்லாம் தேவைப்படாதாம். குறிப்பாக பாஸ்தா போன்ற ஸ்டார்ச் உணவுகளை சாப்பிடவே மாட்டாராம்.
ஏதேனும் சாலட், கிரில் செய்த மீன், சிக்கன் துண்டுகள் மற்றும் ஏதேனும் இரண்டு காய்கறி இதுபோன்று தான் சாப்பிடுவாராம்.
அதே போன்று வெறுமனே பிரட், பாஸ்தா போன்ற மாவுப்பொருள்களால் செய்யப்பட்ட ஸ்டார்ச் உணவுகளை மட்டும் ஒதுக்குவதில்லை. ஸ்டார்ச் இருக்கிறது என்பதால் உருளைக்கிழங்கும் அவர் உணவில் இருக்காது என்பது தான் ஆச்சர்யம்.
பொதுவாகவே அரச பரம்பரையில் மான், ஒட்டகம், முயல் இப்படி வகைவகையான இறைச்சியை ருசி பார்ப்பார்கள் என்று கேள்விபட்டதுண்டு, ஆனால் மகாராணிக்குப் சுத்தமாகவே பிடிக்கவே பிடிக்காது. அந்த மாதிரி அரிய வகை இறைச்சியை இவர் சாப்பிட்டதே இல்லையாம்.
முட்டை பொரியல், கிறிஸ்மஸ் சமயங்களில் செய்யப்படுகிற சால்மன், ட்ரபிள் ஆகிய உணவுகளில் நிச்சயம் முட்டை சேர்க்கப்படும். அந்த உணவுகளைப் பார்த்தாலே எலிசபெத் மகாராணிக்கு பிடிக்காது, இதனால் அவருக்கு முட்டை பிடிக்காது என்பதில்லை, பிரௌன் முட்டை விரும்பி சாப்பிடுவார். அதில் ருசி அதிகம் என்றும் சொல்வாராம்.
வெங்காயமும் பூண்டும் அதிகமாகச் சேர்க்கப்பட்ட உணவு, அது எந்த உயர்தர உணவாக இருந்தாலும் அதை அவர் சாப்பிடவே மாட்டாராம். எலிசபெத்துக்கு டீயுடன் ரஸ்க் வைத்து சாப்பிட மிகவும் பிடிக்குமாம். ஆனால் ரஸ்க்கின் ஓரங்களில் இருக்கும் பிரௌன் கலர் க்ரஸ் பிடிக்காதாம்.
அதனால் அவர் டீ குடிக்கும்முன், ரஸ்க்கின் ஓரங்களில் இருக்கும் பிரட் க்ரஸ்டை வெட்டி பறவைகளுக்காக சேமித்து வைக்கச் சொல்வாராம்.
பொதுவாக மதிய உணவிற்கு பழங்கள், சாலட் சாப்பிடுவது வழக்கம். ஆனால் சீசன் இல்லாத ஹைப்ரிட் பழங்களை ஒரு போதும் ராணி சாப்பிடவே மாட்டார். ஸ்டிராபெர்ரி அவருக்கு மிகப் பிடிக்கும். ஸ்டிராபெர்ரி சீசன் இல்லாத சமயங்களில் கொடுத்தால் தொடக்கூட மாட்டார்.
நுரையுடன் இருந்த பால் சேர்த்த டீ ராணிக்குப் பிடிக்கவே பிடிக்காதாம். அதிலும் சர்க்கரை சேர்க்காத பிளாக் மற்றும் க்ரீன் டீ தான் அவருடைய தெரிவாம்.

Recommended For You

About the Author: Editor