
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று முன் தினம் கணிசமான அளவு சரிவடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியால் வட்டி வீதங்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177 ரூபா 57 சதமாகியுள்ளது.
டொலரின், விற்பனை பெறுமதி 181 ரூபா 24 சதமாகவும் பதிவாகியிருந்தது.