செயற்கைக்கோள்களால் விண் ஆராச்சிக்கு அச்சுறுத்தல்!!

செயற்கைக்கோள்கள் விண்வெளி ஆராய்ச்சிக்கு அச்சுறுத்துலாக விளங்குவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக ‘ஸ்டார்லிங்க்’ என்ற திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.

புவி சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும் செயற்கை கோள்கள், நட்சத்திரங்கள் நேர்கோட்டில் அணிவகுத்து செல்வதைப் போல் காட்சி அளிக்கின்றன.

செயற்கைகோள்களில் பொருத்தப்பட்டுள்ள சோலர் தகடுகள் சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் அவை நட்சத்திரங்கள் போன்று ஜொலிக்கின்றன.

இந்த செயற்கைகோள்களை வெறும் கண்களால் கூட காண முடியும் என்பதால் வானியல் தோற்றத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இது விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் என்றும் வானியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor