ஜிவி பிரகாஷின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக்!

கோலிவுட் திரையுலகில் ஒரு பிரபல நடிகர் நடிக்கும் படங்களின் புரமோஷன்களை இன்னொரு பிரபல நடிகர் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் செய்து வருவது கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் ஆரோக்கியமான செயல் ஆகும்.

அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஆகஸ்ட் 25ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் அட்டகாசமான ஃபர்ஸ்லுக் போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஜிவி பிரகாஷூக்கு ஜோடியாக ஈஷா ரெபா நடித்து வரும் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் சாக்சி அகர்வால், நிகிஷா பட்டேல், சதீஷ், உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். பிரபல இயக்குனர் எழில் இயக்கி வரும் இந்த த்ரில் கலந்த காமெடி படத்திற்கு சி.சத்யா இசையமைக்கின்றார். அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.


Recommended For You

About the Author: Editor