மோடி கூட சோடி TNA

ஜனாதிபதி தேர்தல் களம் சூடிபிடிதுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விரைவில் புதுடெல்லி பயணிக்கவுள்ளனர்.

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைகள் குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தும் விதத்தில் ஆர்.சம்பந்தன்  தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் இந்திய விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும்  இந்திய பிரதமர் நரேந்திர மோடி- ஆர்.சம்பந்தன்  பேச்சுவார்த்தை மிக முக்கிய திருப்புமுனையாக அமையும் என கூட்டமைப்பு கூறுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு கடந்த 12ஆம் திகதி சென்றிருந்தார். அவர் ஒரு வாரம் அங்கு தங்கியிருந்ததுடன்  அவர் தனது மருத்துவத் தேவைக்காகவே இந்தியாவுக்குச் சென்றிருந்தார் என்றே அறிந்துகொள்ள முடிந்தது. இந்நிலையில் விரைவில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி பயனிக்கின்றமை விசேட அம்சமாகும்.


Recommended For You

About the Author: Ananya