மாணவர்கள் விடுதியில் தீ விபத்து

கம்பஹா மாவட்ட நிட்டம்புவ பகுதியில் கட்டமொன்றில் ஏற்பட்ட பாரிய தீபரவலில் கட்டடத்தின் இரண்டாவது மாடி முழுதாக சேதமடைந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நிட்டம்புவ – திஹாரி ஜுனைட் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலின் மேல் மாடியில் அமையப்பெற்றுள்ள மாணவ விடுயிலேயே நேற்று 25.08. 2019 அதிகாலை 3 மணியளவில் திடீர் தீப்பரவல் ஏற்பட்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விரைந்து செயற்பட்டுள்ளனர்.

திடீர் தீப்பரவலையடுத்து விடுதியிலிருந்த அனைத்து மாணவர்களையும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  இதன் போது  குறித்த பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. பின்னர் பொலிஸார் கம்பஹா தீயணைப்பு படையினரையும் , பிரதேச வாசிகளையும் இணைத்துக் கொண்டு தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குறித்த பள்ளிவாசலுக்குள் தீ பரவுவதற்கு முன்னர் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வில்லை , மாணவர் விடுதியில் ஒரு கட்டடம் முழுதாக எரிந்து சேதமடைந்துள்ளது.

அதேவேளை குறித்த விடுதியில் பலபகுதிகளைச் சேர்ந்த 96 மாணவர்கள் தங்குவதுடன் , தீக்கிரையான கட்டிடத்தில் 34 மாணவர்கள் தங்கி வருவதாக தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மின்னொலுக்கு காரணமாக இந்த தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நிட்டம்புவ பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: Ananya