நாளை இல்-து-பிரான்சுக்குள் போக்குவரத்து மாற்றம்

நாளை திங்கட்கிழமை இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்குள் போக்குவரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசடைவு அதிகரித்துள்ளதை அடுத்து, இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த போக்குவரத்து மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, ஓகஸ்ட் 26 ஆம் திகதி, Crit’Air ஒட்டிகளி வகை 0, வகை 1, வகை 2 ஆகியவற்றை கொண்டுள்ள வாகனங்கள் மாத்திரமே பரிசுக்குள் மற்றும் அதன் புறநகர்களில் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Crit’Air ஒட்டிகளில் வகை 3, வகை 4 மற்றும் வகை 5 ஆகிய வாகனங்களுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, இது தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடு, Hauts-de-Seine, Val-de-Marne மற்றும் Seine-Saint-Denis ஆகிய மாவட்டங்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Ananya