விளையாட்டு மைதானத்தில் மின்னல் தாக்கம்!!

கோல்ப் மைதானத்தில் மின்னல் தாக்கியதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

பிஜிஏ டூர் சாம்பியன்ஷிப் கோல்ப் போட்டி, அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்று வருகின்றது.

நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் கூடியிருந்தனர்.

இதன்போது அங்கு திடீரென புயல் காற்று வீசியதால், ரசிகர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் அங்கு திடீரென மின்னல் தாக்கியதில் ஆறு பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Recommended For You

About the Author: Editor