யாழில் நடைபெற்ற விசேட இப்தார் நிகழ்வு!!

யாழ். மாநகரசபையின் சமய விவகார மற்றும் கலை கலாசார மேம்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு குறித்த மேம்பாட்டுக் குழுவின் தலைவரும் யாழ். மாநகரசபை உறுப்பினருமான என்.எம். பாலச்சந்திரன் தலைமையில் நேற்று யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்துள்ளார்.

மேலும் சிறப்பு விருந்தினராக யாழ். மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் கலந்து சிறப்பித்துள்ளார்.

நிகழ்வில் வரவேற்புரையையும், நிகழ்வின் அறிமுகவுரையினையும் கலாசாரக் குழுவின் உறுப்பினரும் யாழ். மாநகரசபை உறுப்பினருமாகிய எம்.எம்.எம். நிபாஹிர் நிகழ்த்தியிருந்ததுடன், இப்தார் விசேட உரையை மௌலவி எம்.ஏ. பைசர் (மதனி) நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் யாழ். மாநகரசபை உறுப்பினர்கள், மதகுருமார்கள், சமய விவகார மற்றும் கலை கலாசார மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினர்கள், யாழ். மாநகர பிரதி ஆணையாளர் அ.சீராளன், யாழ். மாநகரசபை திணைக்களங்களின் தலைவர்கள், யாழ். மாநகரசபை உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Recommended For You

About the Author: Editor