நயனின் அடுத்தபடம் குறித்த அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா தற்போது தர்பார்,சயிரா நரசிம்மரெட்டி, பிகில் ஆகிய திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

இந்த திரைப்படங்களை அடுத்து அவர் த்ரில் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை “அவள்” திரைப்படத்தை இயக்கிய மிலண்ட் ராவ் இயக்கவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வெளியாகும் இந்த திரைப்படத்திற்கான தொழிநுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor