பிள்ளைகள் கொன்று விட்டு தூக்கில் தொங்கிய தந்தை!

புத்தளம், உடப்புவ, பள்ளிவாசல்பாடுவ பகுதியில் பிள்ளைகள் இருவருக்கும் நஞ்சூட்டிவிட்டு, தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நஞ்சூட்டப்பட்ட இரண்டு ஆண் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் 13 மற்றும் 7 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த ஆண் பிள்ளைகளின் சடலங்கள் புத்தளம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாவும், 31 வயதான தந்தையின் சடலம் வீட்டு அறையிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் பிரிவு பொலிஸார் குறித்த மரணங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


Recommended For You

About the Author: Editor