யாழ், மக்களுக்கு இன்ப அதிர்ச்சி!

யாழில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்த வடமாகாண சபை , யாழ். மாநகர சபை , யாழ்.மாவட்ட செயலர் ஆகியோர் கடும் முயற்சிகளை மேற்கொண்டும் மீற்றர் பொருத்த முடியவில்லை.

தூர இடத்தில் இருந்து அதிகாலை வேளை பஸ்ஸில வந்திறங்குபவர்களிடத்தே (உள்ளூர் பஸ் சேவைகள் பெரும்பாலும் காலை 6 மணிக்கு பிறகே ஆரம்பமாகும்) கொள்ளை இலாபம் பெற்று வளர்ந்தவர்கள் மீற்றர் பொருத்த மறுத்து வந்தனர்.

தற்போது , Uber காரன் யாழில் மெல்ல கால் ஊண்டியுள்ளான். பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு செல்ல ஆட்டோக்கரன் 300 ரூபாய் பிடுங்கி வந்தான். இப்ப Uber காரன் காரில கொண்டே விட 178 ரூபாய் கேட்கிறான்.

#Uber சேவை யாழில் விரைவில் விரிவடைய வேண்டும்.

ஸ்ரண்டில நிற்கிற ஓட்டோவை தான் பிடிக்கனும் என தங்களுக்குள் ஒரு சட்டம் இயற்றி கொள்ளை இலாபம் பார்ப்பவர்கள் முன்னால் நின்று Uber ல காரை புக் பண்ணி கெத்தா காரில் வீட்ட போய் இறங்கும் காலம் மிக தொலைவில் இல்லை என பேஸ்புக் நண்பர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor